search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய சாலை அமைக்கும் பணி
    X

    அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். 

    புதிய சாலை அமைக்கும் பணி

    • மானாசாலை-தேளி இடையே புதிய சாலை அமைக்கும் பணியை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
    • முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிச்சை மணி மற்றும் அரசு அலு வலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மானாசாலை - தேளி இடையிலான சுமார் 3.8 கிலோ மீட்டர் தொலை விற்கு நெடுஞ்சாலைத்துறை மூலமாக நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.6.21 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்ப தற்கான பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    மானாசாலை-தேளி இடையிலான தரம் உயர்த்தும் வகையில் போடப்படவுள்ள இந்த புதிய சாலைப்பணியால் வீரசோழன், மானாசாலை, தேளி, கொட்டகாட்சி யேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் பயன்பெறுவார். பொதுமக்கள் வீரசோழன் பகுதிக்கும், வீரசோழன் பகுதியிலுள்ள பொது மக்கள் மானாமதுரை பகுதிக்கும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருஞ்சிறை ெரயில்வே கேட் வழியாக சுற்றி சென்று மானாமதுரைக்கு செல்வது தடுக்கப்பட்டு எளிதாக சென்று சேரும் வகையில் இந்த புதிய சாலை அமைய உள்ளது.

    இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்ப தோடு பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு பொதுமக்கள் தங்களது நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

    இந்த அடிக்கல் நாட்டு விழாவில் நரிக்குடி ஒன்றிய சேர்மன் காளீஸ்வரி சமயவேலு, ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி சிங்கராசு, டி.வேலங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிச்சை மணி மற்றும் அரசு அலு வலர்கள் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×