என் மலர்
உள்ளூர் செய்திகள்

அருப்புக்கோட்டை பள்ளி மாணவர்கள் சாதனை
- மாநில அளவிலான போட்டியில் அருப்புக்கோட்டை பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- ஒரு லட்சத்து 15 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு 26 ஆயிரத்து 750 யோசனைகளை சமர்ப்பித்திருந்தனர்.
அருப்புக்கோட்டை
பள்ளிக்கல்வித்துறை, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் போட்டிகள் மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் நடைபெற்றன. இதில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளியின் ஐன்ஸ்டீன் குழுவைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர்கள் லலித்குமார், கோபிநாத், அபிஷேக் அடங்கிய குழு சமர்பித்த யோசனை ட்ரான்ஸ்பார்மர் செக்யூரிட்டி மாவட்ட அளவில் முதல் 10 இடங்களுக்குள் தேர்வு செய்யப்பட்டு, ஜனவரி மாதம் மண்டல அளவில் நடைபெறும் போட்டியில் விருதுநகர் மாவட்டம் சார்பாக கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களையும், உறுதுணையாக இருந்த அறிவியல் ஆசிரியர் சரவணகுமார் அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜர் ஏ.பி.கே. கல்விக்குழும தலைவர் ஜெயக்குமார், பள்ளி தலைவர் சிவராமகிருஷ்ணன், பள்ளிச் செயலாளர் மணி முருகன், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.
கடந்த மே 6-ந்தேதி கிருஷ்ணன் கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்று 3-ம் இடத்தை பெற்று ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசினையும், முதல்வர் விருதினையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சரிடம் விருது பெற உள்ளனர்.
முன்னதாக இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு 26 ஆயிரத்து 750 யோசனைகளை சமர்ப்பித்திருந்தனர்.






