மாலையம்மன் கோவில் ஆடி தபசு திருவிழா

திருச்சுழி மாலையம்மன் கோவில் ஆடி தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு உட்பட்ட துணை மாலையம்மன்- திருமேனிநாதர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி தபசு திருவிழா விமரிசையாக நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடி தபசு திருவிழா இன்று கொடி யேற்றத்துடன் தொடங்கி யது. முன்னதாக சுவாமி-அம்பா ளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

விழாவில் வருகிற 30-ந்தேதி மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 31-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது. 1-ந்தேதி ஆற்றங்கரையில் தீர்த்த நிகழ்ச்சியும், அன்று மாலை திருமேனிநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் குண்டாற்றில் எழுந்தருளு வார். அங்கு துணை மாலை யம்மனுக்கு தபசு காட்சி கொடுத்த நிகழ்ச்சி நடக்கும். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கி றார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com