விருதுநகர் மாவட்டத்தில் வெறிச்சோடிய வீதிகள்

முழு ஊரடங்கு காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. ரெயில் பயணிகள் வசதிக்காக ஆட்டோக்கள் இயங்கின.
விருதுநகர் பஜாரில் கடைகள் அடைக்கப்பட்டிருப்பதை காணலாம்.
விருதுநகர் பஜாரில் கடைகள் அடைக்கப்பட்டிருப்பதை காணலாம்.
Published on

விருதுநகர்

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழகம்   முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

விருதுநகர் மாவட்டத்தில் 252 பஸ்களும் இன்று இயக்கப்படவில்லை. இதனால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ரெயில்கள் இயக்கப்பட்டதால்  ரெயில் நிலையத்தில் இருந்து செல்வோர் வசதிக்காக ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. 

விருதுநகரில் சிறிய டீக்கடைகள் கூட மூடப்பட்டிருந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டது. 

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி பஸ் நிலையங்களும் இன்று வெறிச்சோடியே காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com