search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சதுர்த்தி விழா கொண்டாட்டம் திண்டுக்கல் விநாயகர் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
    X

    திண்டுக்கல் கோபால சமுத்திரம் 108 விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    சதுர்த்தி விழா கொண்டாட்டம் திண்டுக்கல் விநாயகர் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

    • கோபாலசமுத்திர கரையில் அமைந்துள்ள 108 நன்மை தரும் விநாயர் கோவிலில் பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
    • விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, பொரிகடலை, பழங்கள் உள்ளிட்டவற்றை படையலிட்டு வழிபாடு செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    திண்டுக்கல் கோபாலசமுத்திர கரையில் அமைந்துள்ள 108 நன்மை தரும் விநாயர் கோவிலில் பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இங்குள்ள 32 அடி உயர சங்கடஹரசதுர்த்தி விநாயகருக்கு தென்னஞ்சோலையில் வீற்றிருப்பது போன்ற சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர். மேலும் வெள்ளை விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் நாகல்நகர் சித்திவிநாயகர், நேருஜிநகர் நவசக்திவிநாயகர், ரவுண்டுரோடு கற்பக விநாயகர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    பழனி மலைக்கோவில் ஆனந்தவிநாயகருக்கு வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    வீடுகளில் விநாயகர் வைத்து வழிபடுவதற்காக களிமண்ணால் ஆன சிலைகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். இதேபோல பூஜைக்கு ேதவைப்படும் வாழைஇலை, பூக்கள், எலுமிச்சை, தேங்காய், வாழைப்பழம், கொய்யா, பேரிக்காய், பொரிகடலை போன்றவை விற்பனையும் அமோகமாக நடைபெற்றது.

    குறிப்பாக பூைஜக்கு பயன்படுத்தப்படும் எலுமிச்சை விலை கடும் உயர்வை சந்தித்தது. 50 கிலோ எடைகொண்ட ஒரு மூடை ரூ.2500 முதல் ரூ.3500 வரை விற்கப்பட்டது. திண்டுக்கல் சிறுமலையில் இருந்து எலுமிச்சைகள் விற்பனைக்கு ெகாண்டு வரப்பட்டன. வழக்கமாக தேவை அதிகமாக உள்ள சமயத்தில் விளைச்சல் குறைவு காரணமாகவும், எடுப்பு கூலி, குதிரை வண்டி வாடகை, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த விலை அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆயுத பூஜைவரை விலை குறைய வாய்ப்பில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    கடந்த 3 நாட்களாகவே பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு பெரும்பாலான பூக்கள் விலை அதிகரித்து விற்கப்பட்டது. இருந்தபோதும் பக்தர்கள் அதனை வாங்கிச்சென்று தங்கள் வீடுகளில் வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, பொரிகடலை, பழங்கள் உள்ளிட்டவற்றை படையலிட்டு வழிபாடு செய்தனர்.

    Next Story
    ×