சாத்தான்குளம் அருகே மழை வேண்டி கிராம மக்கள் நூதன வழிபாடு

சாத்தான்குளம் ஒன்றிய இந்து அன்னையர் முன்னணி சார்பில் புத்தன்தருவை பெருமாள் பெண்கள் விரதமிருந்து வீட்டில் மஞ்சள் நீர் வைத்து பூஜை நடத்தினர். நெல்லை கோட்ட இந்து முன்னணி தலைவர் தங்க மனோகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடத்தும் கிராம மக்கள்.
அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடத்தும் கிராம மக்கள்.
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் பகுதியில் போதிய மழை பெய்து தண்ணீர் பஞ்சம் நீங்கி விவசாயம் செழிக்க வேண்டி சாத்தான்குளம் ஒன்றிய இந்து அன்னையர் முன்னணி சார்பில் புத்தன்தருவை பெருமாள் நகரில் பெண்கள் விரதமிருந்து வீட்டில் மஞ்சள் நீர் வைத்து பூஜை நடத்தினர். பின்னர் ஊர்வலமாக வந்து கும்மியடித்து அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுவிழா மற்றும் அபிஷேகம் நடத்தினர். இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சக்திவேலன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் . நெல்லை கோட்ட இந்து முன்னணி தலைவர் தங்க மனோகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இதில் சாத்தான்குளம் ஒன்றிய இந்து அன்னையர் முன்னணி தலைவி பரமேஸ்வரி தலைமையில் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை நடத்தினர். இதில் சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலாளர் மாயவன முத்துசாமி, துணைத்தலைவர் இசக்கி முத்து, செயற்குழு உறுப்பினர்கள் செல்வ முத்துக்குமார், முத்துக்குமார், புத்தன்தருவை கிளை கமிட்டி தலைவர் ஈஸ்வரன், செயலாளர் ஜார்ஜ் உள்ளிட்ட இந்து முன்னணியினர், இந்து அன்னையர் முன்னணியினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com