கன்னியாகுமரியில் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த விஜய்வசந்த்

மைதானம் சரி செய்யும் பணியினையும் தொடங்கி வைத்தார்.தியாகி கொடிகால் ஷேக் அப்துல்லாவை சந்தித்து நலம் விசாரித்தார்.
கன்னியாகுமரியில் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த விஜய்வசந்த்
Published on

கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மைதானத்தை சீரமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

அதாவது பல ஊர் மற்றும் ஊர் மக்களின் தேவைகளுக்காக சொந்த செலவில் JCB எந்திரம் ஒன்றினை இயக்கி வந்தனர்.

அவர்களுக்கு விஜய் வசந்த் எம்பி தனது சொந்த செலவில் JCB எந்திரம் ஒன்றை வாங்கி மக்களின் தேவைகளுக்காக  வழங்கி அர்பணித்துள்ளார்.

மேலும் கோணம் அரசு கல்லூரியில் மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க மைதானம் சரி செய்யும் பணியினையும் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து எல்லைப் போராட்ட தியாகி கொடிகால் ஷேக் அப்துல்லா குந்திரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த விஜய் வசந்த் எம்பி அவரையும் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com