சமூக நலக்கூடம் - திட்டத்தை தொடங்கி வைத்த விஜய் வசந்த் எம்.பி.

மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிக்கு ஆராட்டு விழா.சமூக நலக் கூட திட்டத்தை தொடங்கி வைத்த விஜய் வசந்த் எம்.பி.
சமூக நலக்கூடம் - திட்டத்தை தொடங்கி வைத்த விஜய் வசந்த் எம்.பி.
Published on

அஞ்சுகிராமம், மயிலாடி நாஞ்சில் நாடு புத்தனார் கால்வாய் தீர்த்தவாரி மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிக்கு ஆராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் மற்றும் ஆராதனையில் பக்தர்களுடன் பங்கேற்றார்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் புதிய சமூக நலக் கூடம் கட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கூடம் அமைக்கும் பூமி பூஜை விழாவிலும் விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com