search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பராமரிப்பு பணிகளை தொடங்கி வைத்த விஜய் வசந்த் எம்.பி.

    • 6 சாலைகள் பராமரிப்பிற்கு 11.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • வட்டார காங்கிரஸ் தலைவர் ரவிசங்கர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:-

    தேசிய நெடுஞ்சாலை மட்டுமின்றி கிராமப்பற சாலைகளை மேம்படுத்தவும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறோம். இடைவிடாத முயற்சியின் பலனாக மத்திய அரசின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேல்புறம் வட்டாரத்திற்கு உட்பட்ட 6 சாலைகள் பராமரிப்பிற்கு 11.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த சாலை பணிகளை நேற்று துவக்கி வைத்தேன்.

    வட்டார காங்கிரஸ் தலைவர் ரவிசங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரத்தினகுமார்,கே.ஜி. ரமேஷ் குமார், எட்வர்ட், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் திபாகர், முன்னாள் வட்டாரத் தலைவர்கள் மோகன் தாஸ், சதீஷ், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் அம்பிளி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரபு, செயற்பொறியாளர் ஏழிசை செல்வி, உதவி செயற்பொறியாளர் மரிய தேவிகா, மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆயிஷா பீவி, ராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×