என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்திய அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
- தொழிலாளர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
- சலுகைகள் வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டேன்.
கன்னயாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
மாத சம்பளம் ரூபாய் 30,000 வரை பெறும் தொழிலாளர்களை இ.எஸ்.ஐ எனப்படும் தொழிலாளர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தேன்.
மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்து பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பணிபுரியும் சமூக பாதுகாப்பு உதவியாளர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட தொழில் முன்னேற்ற உறுதி (MACP) சலுகைகள் வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டேன்.
Next Story






