நாகர்கோவில் அருகே காமராஜர் சிலையை தன் சொந்த செலவில் திறந்து வைத்த விஜய் வசந்த் எம்பி

காமராஜர் படிப்பகத்தில் சிலை நிறுவ கோரிக்கை வைத்த நிர்வாகிகள்.தனது சொந்த செலவிலேயே காமராஜர் சிலையை நிறுவினார்.
நாகர்கோவில் அருகே காமராஜர் சிலையை தன் சொந்த செலவில் திறந்து வைத்த விஜய் வசந்த் எம்பி
Published on

நாகர்கோவில் பள்ளிவிளையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் படிப்பகத்தில் பெருந்தலைவரின் சிலை நிறுவ வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியினர் மற்றும் படிப்பக நிர்வாகிகள் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி யிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனை நிறைவேறும் விதமாக விஜய்வசந்த் எம்பி தனது சொந்த செலவிலேயே காமராஜர் வெண்கல சிலையை நிறுவி அதனை அவரது தலைமையிலேயே திறந்து வைத்தார்.

இந்த விழாவில் நாகர்கோவில் மாநகர மேயர் ரெ. மகேஷ், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவீன் குமார், மாநகராட்சி மண்டல தலைவர் ஜவஹர், காங்கிரஸ் கட்சியின் மண்டல தலைவர் செல்வன், மாமன்ற உறுப்பினர் அனுஷா பிரைட் மற்றும் காங்கிரஸ் திமுக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com