search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி சமயத்தில் லஞ்சஒழிப்பு சோதனை அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் பீதி
    X

    கோப்பு படம்

    தீபாவளி சமயத்தில் லஞ்சஒழிப்பு சோதனை அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் பீதி

    • தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையின்போது அரசு அலுவலகங்களில் பரிசுபொருட்கள் மற்றும் பணம் பெறுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
    • தீபாவளி சமயத்தில் நடத்தப்படும் லஞ்ச ஒழிப்பு சோதனையினால் அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையின்போது அரசு அலுவலகங்களில் பரிசுபொருட்கள் மற்றும் பணம் பெறுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை கண்காணித்து தடுக்க மாநிலம் முழுவதும் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது. திண்டுக்கல் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் நேற்று லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடந்தது.

    இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது. அலுவலகத்தில் இருந்த 5 அறைகளிலும் பூட்டப்பட்டிருந்த மேஜை, பீரோ அனைத்தையும் திறந்து சோதனை நடத்தினர்.

    மேலும் பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரிடமும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் கணக்கில் வராத பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதேபோல் பல்வேறு அலுவலகங்களிலும் சோதனை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தீபாவளி பணம் அதிகளவில் புழங்கக்கூடிய வட்டார போக்குவரத்து அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், வட்டாட்சியர் மற்றும் அரசுத்துறை அலுவலகங்களை குறிவைத்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தீபாவளி சமயத்தில் நடத்தப்படும் இந்த சோதனையினால் அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×