வேலூர் கோட்டை மதில் சுவரில் மனதின் குரல் 3 டி காட்சி

முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டது சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் ஆர்வமுடன் பார்வையிட்டனர்
வேலூர் கோட்டை மதில் சுவரில் மனதின் குரல் 3 டி காட்சி
Published on

வேலூர்:

பிரதமர் மோடியின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியையொட்டி வேலூர் கோட்டை 3டி ஒளி வெள்ளத்தில் ெஜாலித்தது.

பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் வானொலியில் நாட்டு மக்களுடன் நேரடியாக உரையாடி வருகிறார்.

அதன் 100-வது நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இந்நிகழ்ச்சியை வெற்றிப்பெறச் செய்யும் வகையில் நாடு முழுவதும் வரலாற்றுச் சிறப்புமிக்க 13 இடங்களில் 2 நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த வகையில் சுதந்திரப் போராட்ட வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை மதில்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை இரவு 3டி ஒளி வெள்ளத்தில் ஜொலித்தன. தவிர முதல் நாளான சனிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது வேலூர் கோட்டை சுவற்றில் 3டிதொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமான முறையில் பிரதமர் இதுவரை ஆற்றிய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மேலும் விடுதலைப் போராட்ட வரலாற்றின் சுருக்கமும் ஒளிபரப்பப்பட்டது. இதனை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com