search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் விமான நிலையத்திற்கு செல்லும் சாலை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும்பணி நிறைவு
    X

    வேலூர் விமான நிலையத்திற்கு செல்லும் சாலை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும்பணி நிறைவு

    • ரூ.71.15 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டது
    • நெடுஞ்சாலை துறை, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது

    வேலூர்:

    வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் நவீன வசதிகளுடன் விமான நிலையம் அமைக்க முதற்கட்டமாக ரூ.32.52 கோடியில் 120 ஏக்கர் பரப்பளவில் சிறிய ரக விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டது.

    இதற்காக விமான ஓடுதளம், தகவல் மற்றும் தொலை தொடர்பு கட்டுப்பாட்டு அறை, நிர்வாக அலுவலகம், தங்கும் விடுதி, கார் பார்க்கிங், ஹோட்டல், பயணிகள் மற்றும் விமானிகள் ஓய்வறை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

    இப்பணிகளை முடித்து சுற்றுச்சுவர் கட்டவும், ரன்வே விரிவுப்படுத்தவும் விமான நிலையத்தின் நடுப்பகுதியில் அப்துல்லாபுரம்-தார்சாலை வருவதால் அந்த சாலை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    அதற்கு மாற்றாக விமான நிலையத்தின் அருகே ரூ.71.15 கோடியில் புதிய சாலை அமைக்கப்பட்டது. தற்போது, விமான நிலையத்திற்கு தடுப்பு வேலி, உள்ளிட்ட அடிப்படை பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில், விமான நிலையத்திற்கு செல்லும் சாலை, இரு வழி சாலையாக உள்ளது.

    விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, அதிகப்படியான வாகனங்கள் வந்து செல்லும் என்பதால், 2 வழி சாலையை, 4 வழி சாலையாக மாற்ற மாநில நெடுஞ்சாலை துறை, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.

    இதையடுத்து, 4 வழி சாலையாக மாற்ற ரூ.71.80 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது, சாலை அகலப்படுத்தும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

    Next Story
    ×