குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து

தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர் குடியாத்தம் நகர் மன்ற தலைவர் ஆய்வு
குப்பை கிடங்கில் தீயை அணைக்கும் வீரர்களை படத்தில் காணலாம்.
குப்பை கிடங்கில் தீயை அணைக்கும் வீரர்களை படத்தில் காணலாம்.
Published on

குடியாத்தம்:

குடியாத்தம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளின் ஒரு பகுதி குடியாத்தம் தரணம் பேட்டை வீரபத்திர மேஸ்திரி தெருவில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தின் அருகே உள்ள காலி இடத்தில் தற்காலிகமாக சேகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த குப்பை கிடங்குக்கு அருகில் பஜார் பகுதி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக குடியாத்தம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முற்றிலும் அணைத்தனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகராட்சி பொறியாளர் சிசில் தாமஸ், நகர மன்ற உறுப்பினர்கள் என்.கோவிந்தராஜ், எம். எஸ்.குகன் உள்ளிட்டோர் விரைந்து சென்று பார்வையிட்டு தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com