சாத்துமதுரை முருகர் கோவிலில் கார்த்திகை மகா தீபம்

மலர் அலங்காரம் செய்யப்பட்டது பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
சாத்துமதுரை முருகர் கோவிலில் கார்த்திகை மகா தீபம்
Published on

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்துமதுரை கிராமத்தில் குன்றின் மேல் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சமேத பாலசுப்ரமணியர் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதற்கு கிராம கனாச்சாரி சிவலிங்கம், கிராம நாட்டான்மைதாரர் துளசிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமிராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் முருகனடிமை ஜம்பு என்கிற சம்பத் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தங்க கவசம் அணிவித்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை 6 மணி அளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com