search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் அகல் விளக்குகள் தயாரிப்பு பணி தீவிரம்
    X

    கார்த்திகை தீப திருவிழாவையொட்டி வேலூர் காகிதப்பட்டறையில் தயார் செய்யப்பட்ட அகல் விளக்கை உலர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

    வேலூரில் அகல் விளக்குகள் தயாரிப்பு பணி தீவிரம்

    • விரைவில் கார்த்திகை தீபம் வர இருப்பதால் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்
    • மண்பாண்ட தொழிலாளர்கள் உற்சாகம்

    வேலூர்:

    கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி வருவதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 'அகல் விளக்குகள்' தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    தமிழகத்தில் முக்கிய பண்டிகையாக கொண்டாடப் படும் கார்த்திகை தீப திருவிழா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவம்பர் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6-ந் தேதி காலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் கொண்டாடப்பட உள்ளது.

    இதற்காக, மக்கள் தயாராகி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் மண் பாண்ட தொழிலாளர்கள் உள்ள வேலூர் சூளைமேடு, காகித பட்டறை, குடியாத்தம், கே.வி.குப்பம், கணியம்பாடி, அணைக்கட்டு, மேலகுப்பம், ஒடுக்கத்தூர், பொய்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில், பண்டிகை காலங்களுக்கு ஏற்றவாறு, களிமண்ணால் செய்யக்கூடிய பொருட்களை தயாரித்து அதை விற்பனை செய்து வருகின்றனர். விரைவில் கார்த்திகை தீபத் திருவிழா வர இருப்பதால் மண்பாண்ட தொழிலாளர்கள் தற்போது 'அகல் விளக்குகள்' தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×