search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மலை கிராம பகுதிகளில் சாரல் மழை
    X

    வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மலை கிராம பகுதிகளில் சாரல் மழை

    • ேமகம் மந்தமாக காணப்படுவதால் வெப்பம் குறைந்தது
    • நிலத்தடி நீர் அதிகரிக்க வாய்ப்பு

    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மலைக்கிராம பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது.

    ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் உள்ள ஆலங்காயம் மற்றும் நாட்றம்பள்ளி பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது.இந்த மழை கடந்த வாரம் முதல் அதிகரித்து வரும் வெப்பத்தில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளித்தது.

    ஆலங்காயம் தாலுக்காவில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை பெய்துள்ளது. இந்த பருவத்துக்கான விதைப்பு பணிகளை துவங்கியுள்ள விவசாயிகள், மழையால் பயனடைந்தனர். ஆலங்காயம், நாட்றம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நெல், கரும்பு, வாழை மற்றும் சோளம் உள்ளிட்ட முக்கியப் பயிர்கள் பயிடப்பட்டுள்ளன.

    இதுபோன்ற மழையால், இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ள நிலத்தடி நீரை அதிகரிக்க செய்ய உதவுகிறது. பாலாற்றின் நீர் பாசனத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

    அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. முந்தைய வடகிழக்கு பருவமழையின் போது மழை குறைவாக இருந்ததால், இதுபோன்ற மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கருதுகின்றனர்.

    இந்த கோடையில் வறண்ட பகுதிகளில் ஏற்படும் குடிநீர் நெருக்கடியை நிவர்த்தி செய்வதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    தற்போது, வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிகள் மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள 944 கிராமங்கள் மற்றும் முக்கிய நகரங்களான வாலாஜா, ஆற்காடு, திமிரி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்ப டுகிறது. இத்திட்டத்திற்காக பாலாற்றின் குறுக்கே குழாய்கள் அமைக்கப்பட்டன.

    தற்போது, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், இத்திட்டத்தை செயல்ப டுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் குழாய்களில் பழுது நீக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

    இத்தகைய திடீர் மழை அதிகப்படியான ஆவியாதலை குறைக்க உதவும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×