வெள்ளகோவிலில் ரூ. 38 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

52 ஆயிரத்து 882கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.
வெள்ளகோவிலில் ரூ. 38 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
Published on

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை 119விவசாயிகள் கலந்து கொண்டு 52 ஆயிரத்து 882கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த 8வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 82.30க்கும், குறைந்தபட்சம் ரூ.59.10க்கும் கொள்முதல் செய்தனர்.

மொத்தம் ரூ.38லட்சத்து 51ஆயிரத்து 665க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com