மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து காய்கறி வியாபாரி சாவு

வளைவில் வண்டியை திரும்புபோது திடீரென்று மோட்டார் சைக்கிளில் நிலைத்தடுமாறி அவர் கீழே விழுந்தார்.சிகிச்சை பலனின்றி பரிதபமாக உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து காய்கறி வியாபாரி சாவு
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சாலை குள்ளாதிரம்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது43). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர் சங்கம்பட்டியில் உள்ள உறவினரின் வீட்டில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பின்னர் மாலை வீடு திரும்பி வரும்போது கெட்டூர் பிரிவு ரோடு வளைவில் வண்டியை திரும்புபோது திடீரென்று மோட்டார் சைக்கிளில் நிலைத்தடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சக்திவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனே பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com