search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேர்வைக்காரன்மடத்தில்  வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
    X

    மருத்துமுகாம் நடந்தபோது எடுத்த படம்.

    சேர்வைக்காரன்மடத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

    • சேர்வைகாரன்மடம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெபக்கனி முகாமை தொடங்கி வைத்தார்.
    • முகாமில் பொது மருத்துவம், ரத்த சோகை, காய்ச்சல் உட்பட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சாயர்புரம்:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தூத்துக்குடி சுகாதார மாவட்டம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் சாயர்புரம் அருகே உள்ள சேர்வைக்காரன்மடம் டி.என்.டி.டி.ஏ. பள்ளியில் நடந்தது.

    சேர்வைகாரன்மடம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெபக்கனி முகாமை தொடங்கி வைத்தார். முன்னாள் தலைவர் ஞானசேகர், காமராஜ் நகர் வார்டு உறுப்பினர் ஜான்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் முடிவைத்தானேந்தல் மருத்துவ அலுவலர் டாக்டர் காளீஸ்வரி, சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் முருகேசன், புதுக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஹேமலதா ஆகியோர் நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.

    தூத்துக்குடி வட்டார மருத்துவமில்லா மேற்பார்வை யாளர் மதிவாணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுக நயினார் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி சிறப்பு மருத்துவர்கள், சமுதாய நல செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் பொது மருத்துவம், ரத்த சோகை, விட்டமின் குறைபாடுகள், காய்ச்சல், நீரிழிவு நோய், இறப்பை மற்றும் குடல் நோய், மனநோய், பால் வினை நோய், இதயம், தோல், காது, மூக்கு, தொண்டை, பல், கண் நோய், மகளிர் நலம், மகப்பேறு, குழந்தைகள் நலம் உட்பட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொழுப்பின் அளவு, இரும்பு சத்து அளவு, சிறுநீரக செயல்பாட்டு சோதனை, கர்ப்பப்பை வாய் புற்று நோய் கண்டறிய பாப் தடவல், இ.சி.ஜி, கர்ப்பிணி பெண்க ளுக்கு ஸ்கேன் பரிசோதனை உட்பட பல்வேறு பரிசோத னைகள் இலவசமாக செய்யப்பட்டன. இந்த முகாமில் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    Next Story
    ×