வராஹி அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா

தானப்ப கவுண்டர் பள்ளி வளாகத்தில் அஷ்ட வராஹி அம்மன் கோவில் அமைந்துள்ளது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வராஹி அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் உள்ள தானப்ப கவுண்டர் பள்ளி வளாகத்தில் அஷ்ட வராஹி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்து 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி பூஜை, சிறப்பு ஹோமம் மற்றும் யாக பூஜைகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து யாக சாலையில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட புனித நீர் குடங்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் ஸ்ரீ அஷ்ட வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான பழங்கள், பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்கார சேவையும், உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com