என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு பூஜை நடந்தபோது எடுத்த படம்.
கோவில்பட்டி புற்றுக்கோவிலில் வளர்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
- கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் வளர்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
- தொடர்ந்து கால பைரவருக்கு 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் வளர்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி காலையில் கோவில்நடை திறக்கப் பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கால பைரவருக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார்.
இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி ,பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டாரப்பகுதி பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தயிர்சாதம் மற்றும் உளுந்து வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி, ரவிநாரயணன், பிரேமா, முருகன் ஆகியோர் செய்தனர்.
Next Story






