48 அடியாக குறைந்த வைகை அணை நீர் மட்டம் - விவசாயிகள் கவலை

தென்மேற்கு பருவமழை தொடங்கிய போதும் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் அணையின் நீர் மட்டம் உயராமலேயே உள்ளது.தொடர்ந்து மழை ஏமாற்றி வருவதால் நெல்சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என எதிர்பார்த்துள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு போதிய அளவு நீர் மட்டம் இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தொடங்கிய போதும் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் அணையின் நீர் மட்டம் உயராமலேயே உள்ளது.

இதனை நம்பியுள்ள விவசாயிகள் விவசாய பணிகள் மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து மழை ஏமாற்றி வருவதால் நெல்சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால் அவர்கள் கவலையில் உள்ளனர். இன்று காலை நிலவரப்படி வைகை அணை நீர் மட்டம் 48.62 அடியாக உள்ளது. 102 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கபப்டுகிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 119.45 அடியாக உள்ளது. 406 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 52.85 அடியாக உள்ளது. 57 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. 53 அடியை எட்டியவுடன் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். இருந்த போதும் தற்போது கரையோர மக்கள் பாது காப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி யுள்ளனர்.

சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 88.56 அடியாக உள்ளது. 9 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 3.4, மஞ்சளாறு 9.8, சோத்துப்பாறை 1 மி.மீ மழை அளவு பதிவாகி யுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com