ரெயில் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலி

கன்னியாகுமரி-புனே ெரயில் மோதி இறந்து கிடந்தார். பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரெயில் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலி
Published on

கோவை :

போத்தனூர்- கோவை ரெயில்வே தண்டவாளம் இடையே நஞ்சுண்டாபுரம் அருகே 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கன்னியாகுமரி-புனே ெரயில் மோதி இறந்து கிடந்தார். இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுறை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் வாலிபரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரெயில் மோதி இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. அவர் தண்டவாளத்தை கடந்தபோது ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் 

X

Maalai Malar
www.maalaimalar.com