search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை சங்கிலிவீதி பத்ரகாளியம்மன் கோவில்  திருவிழா - சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது
    X

    உடுமலை சங்கிலிவீதி பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா - சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது

    • மாலை 6 மணிக்கு கும்பம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
    • உடுமலை நாடார் இளைஞர் அணி நிர்வாகிகள் செய்து வரு கின்றனர்.

    உடுமலை :

    உடுமலை சங்கிலி வீதியில் எழுந்தருளியிருக்கும் உடுமலை நாடார் உறவின் முறையார் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் அர்ச்சகர் கிரிவாச பகவதி குருக்கள், பத்ரகாளியம்மன் கோவில் அர்ச்சகர் ஹரிஹர சிவம் ஆகியோர் சாமி சாட்டுதல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

    வருகிற 26 ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கருப்பண்ண சாமி பூஜை நடைபெற உள்ளது. 27ந் தேதி காலை 5 மணிக்கு திருமூர்த்தி மலை தீர்த்தம் கொணர்தல் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு குட்டை திடலில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலுக்கு கொண்டு வருதல் மற்றும் புண்ணியார்ச்சனை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 28 ந்தேதி காலை 9:30 மணிக்கு கொடியேற்றுதல், காப்பு கட்டுதல், முளைப்பாலிகையிடுதல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு கும்பம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    மார்ச் 4ந் தேதி மாலை 6 மணிக்கு பூவோடு எடுத்து வருதலும், 5 -ந்தேதி காலை 8 மணிக்கு மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபாடு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து 6 -ந் தேதி காலை 10 மணிக்கு அம்பாள் திருக்கல்யாணம், மாலை 5 மணிக்கு பரிவட்டம் கட்டுதல், மாலை 7 மணிக்கு அம்பாள் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    7-ந் தேதி மாலை 6 மணிக்கு கொடி இறக்குதல், கும்பம் விடுதல், முளைப்பாலிகை விடுதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 8 -ந்தேதி மாலை 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் அதனைத் தொடர்ந்து பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உடுமலை நாடார் உறவின் முறையார் சங்க நிர்வாகிகள், உடுமலை நாடார் மகளிர் அணி நிர்வாகிகள், உடுமலை நாடார் இளைஞர் அணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×