வயலில் உழுதபோது தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் பலி

விவசாய நிலத்தில் இரும்பு மின்கம்பம் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்தது. உழுதுகொண்டு இருந்த 2 மாடுகளும் மின்சாரம் பாய்ந்து அங்கேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தன.
வயலில் உழுதபோது தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் பலி
Published on

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன்(வயது53) விவசாயி. இவர் பாகல்மேடு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 2 மாடுகளை கொண்டு உழுது கொண்டு இருந்தார்.

அந்த விவசாய நிலத்தில் இரும்பு மின்கம்பம் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு விளைநிலத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் திடீரென பாய்ந்தது.

இதில் உழுதுகொண்டு இருந்த 2 மாடுகளும் மின்சாரம் பாய்ந்து அங்கேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தன. விவசாயி வாசுதேவனும் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் உடனடியாக அங்கிருந்த டிரான்ஸ்பாரர்மரில் மின்சப்ளையை துண்டித்தனர். இதைத்தெடர்ந்து வாசுதேவனை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com