தனியார் கம்பெனியில் அலுமினிய பொருட்களை திருடிய 2 பேர் கைது

பொன்னேரி அடுத்த மேட்டுப்பாளையம் அருகில் தனியார் கண்டெய்னர் கம்பெனி செயல்பட்டு வருகிறது. அப்புன் ராஜ், வெங்கடாசலம் ஆகியோர் கம்பெனியில் இருந்த அலுமினிய பொருட்களை திருடி விற்றது தெரிய வந்தது.
தனியார் கம்பெனியில் அலுமினிய பொருட்களை திருடிய 2 பேர் கைது
Published on

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த மேட்டுப்பாளையம் அருகில் தனியார் கண்டெய்னர் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு லோடுமேனாக பொன்னேரியை அடுத்த பள்ளம் பகுதியைச் சேர்ந்த அப்புன் ராஜ், வெள்ளக்குளம் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் கம்பெனியில் இருந்த அலுமினிய பொருட்களை திருடி விற்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com