search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துறையூரில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து காவலாளி பலி
    X

    துறையூரில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து காவலாளி பலி

    • ராஜேந்திரன் கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி பணியில் ஈடுப்பட்டார்.
    • அவர் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து கீழே இறங்கும் போது தவறி விழுந்தார்.

    திருச்சி

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட து.களத்தூர் கிராமத்தில் வெளி மாநிலத்தை தலைமை இடமாகக் கொண்டு ஒரு தனியார் நிறுவனம் செயல் பட்டு வருகிறது.

    இதில் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 காவலர்கள் உட்பட 14 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு பணியில் இருந்த களத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி காவல் பணி பார்த்துவிட்டு கீழே இறங்கும்போது, எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவின்றி கீழே கிடந்தார்.

    இதனை பார்த்த காவலர்கள் சிவகுமார், வேலுச்சாமி, பாலசுப்பிரமணி ஆகியோர் நிறுவன மேலாளர் ஹரிஹர சுப்பிரமணியன் உதவியுடன் சிகிச்சைக்காக ராஜேந்திரனை துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜேந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து மேலாளர் ஹரிஹர சுப்பிரமணியக் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×