திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மணப்பாறையில் நாளை ஐம்பெரும் விழா - உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை (28-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் மணப்பாறை ஒன்றியம் உள்ள தியாகேசர் ஆலை மைதானத்தில், ஐம்பெரும் விழா நடைபெறுகிறது.விழாவில் கழக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குகிறார்.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மணப்பாறையில் நாளை ஐம்பெரும் விழா - உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்
Published on

திருச்சி:

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை (28-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் மணப்பாறை ஒன்றியம் உள்ள தியாகேசர் ஆலை மைதானத்தில், ஐம்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கழக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குகிறார்.

இதையடுத்து மணப்பாறை ஒன்றிய தி.மு.க. சார்பில் அகில இந்திய அளவிலான கபடி போட்டி துவக்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார். மணப்பாறை ஒன்றிய தி.மு.க. அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா, கழகத் தலைவராக பொறுப்பேற்று நான்காம் ஆண்டு நிறைவு விழா, மணப்பாறையில் தொகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைய உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவிக்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் தலைமைக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com