என் மலர்
உள்ளூர் செய்திகள்

இன்ஜினீயரிங் மாணவி திடீர் மாயம்
- சிறுகனூர் அருகே கல்லூரி விடுதியில் இருந்து மாயமானார்
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
சிதம்பரம் கே தென்பதி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் இவரது மகள் தமிழரசி (வயது 21). இவர் சிறுகனூர் அருகே உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் அவர் தங்கி இருந்தார்.இந்த நிலையில் விடுதியில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து விடுதி வார்டன் மாணவியின் தந்தைக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து சிவக்குமார் சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். அதில் மாயமான தனது மகளை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மாயமான மாணவி தமிழரசி அதே கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்தவரும் நந்தா என்கிற நந்தகுமாருடன் பழக்கம் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அந்த மாணவருடன் தமிழரசி ஓட்டம் பிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது.






