என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருச்சியில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
  X

  திருச்சியில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதிய தமிழகம் கட்சியின் திருச்சி மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
  • கிழக்கு மாவட்ட செயலாளர் அ. பிச்சைமுத்து, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கோ.சண்முகம், மாநில இளைஞரணி குழு உறுப்பினர் விஜய.பிரபு ஆகியோர் தலைமை தாங்கினார்

  திருச்சி,

  புதிய தமிழகம் கட்சியின் திருச்சி மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

  கிழக்கு மாவட்ட செயலாளர் அ. பிச்சைமுத்து, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கோ.சண்முகம், மாநில இளைஞரணி குழு உறுப்பினர் விஜய.பிரபு ஆகியோர் தலைமை தாங்கினார்.

  ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார், முன்னதாக, மாவட்ட துணைச் செயலாளர் ராஜா வரவேற்று பேசினார்.

  சிறப்பு அழைப்பாளர்களாக, மாநில துணை அமைப்புச் செயலாளர், தேனி பொ.பாலசுந்தரராஜ், மாநில துணை பொதுச் செயலாளர் கதிரேசன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் வாழையூர் குணா ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். வெனித் ச.பிரபாகரன் ,மேற்கு மாவட்ட இளைஞரணி முருகானந்தம், தில்லைநகர் பகுதிச் செயலாளர்கள் பாலா, அன்னதாசன் உள்ளிட்ட இளைஞரணி, மாணவரணி, நிர்வாகிகள் உள்ளிட்டோர் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

  கூட்டத்தில் வருகிற செப்டம்பர் 11ம் தேதி நடைபெறும் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவஞ்சலி பேரணியில் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் திருச்சி மாவட்டத்திலிருந்து திரளான பேர் பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  Next Story
  ×