உப்பிலியபுரம் அருகே - மின்சாரம் தாக்கி பெண் கூலித் தொழிலாளி பலி

நெல்பயிர் நடவு பணிகளுக்காக காலை வேலையில் சென்ற ரங்கம்மாள் வரப்பில் நடந்து சென்ற பொழுது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்து அருகில் இருந்த மின் இணைப்பு பெட்டியில் விழுந்துள்ளார் . ஒயரில் மின் கசிவு காரணமாக உயர் அழுத்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ரங்கம்மாள் உயிரிழந்தார் .
உப்பிலியபுரம் அருகே - மின்சாரம் தாக்கி பெண் கூலித் தொழிலாளி பலி
Published on

உப்பிலியபுரம்

கோட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரங்கம்மாள் (வயது 66). கணவர் பெயர் நல்லு.

இவர் பச்ச பெருமாள் பட்டியில் வசிக்கும் தனது மகள் மல்லிகாவை பார்க்க 2 தினங்களுக்கு முன் சென்றுள்ளார். அங்கு கூலி வேலைக்கு செல்லும் மல்லிகா தனது தாயையும் கூலி வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆலத்துடையான் பட்டி ஏரிக்கரையில் உள்ள ராஜி என்பவர் தோட்டத்தில் நெல்பயிர் நடவு பணிகளுக்காக காலை வேலையில் சென்ற ரங்கம்மாள் வரப்பில் நடந்து சென்ற பொழுது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்து அருகில் இருந்த மின் இணைப்பு பெட்டியில் விழுந்துள்ளார் . அப்பொழுது மின் இணைப்பு பெட்டியில் இருந்த ஒயரில் மின் கசிவு காரணமாக உயர் அழுத்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ரங்கம்மாள் உயிரிழந்தார் .

தகவலின் பேரில் மின் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் உப்பிலியபுரம் சப் இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ் செபாஷ்டின் சந்தியாகு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com