திருச்சியில் லாரி திருட்டு

திருச்சி பாலக்கரை பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சையத் அபுதாஹிர்(48) சொந்தமாக மினி லாரி வைத்து ஓட்டி வருகிறார்.சில மணி நேரத்திற்கு பிறகு லாரியை எடுப்பதற்காக வந்த போது லாரி மாயமாகி இருந்தது.
திருச்சியில் லாரி திருட்டு
Published on

திருச்சி :

திருச்சி பாலக்கரை பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சையத் அபுதாஹிர்(48) சொந்தமாக மினி லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவர் தன்னுடைய மினி லாரியை தஞ்சை பிரதான சாலையில் உள்ள வேர் ஹவுஸில் நிறுத்தி வைத்துள்ளார்.

சில மணி நேரத்திற்கு பிறகு லாரியை எடுப்பதற்காக வந்த போது லாரி மாயமாகி இருந்தது. இது குறித்து சையது அபுதாஹிர் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பாலக்கரை கீழ படையாச்சி தெருவை சேர்ந்த ராமலிங்கம் (39) என்பவர் மினி லாரியை திருடியது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.4 லட்சம் மதிப்புடைய மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com