search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 கோவில்களின் பூட்டை ஒரு லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை
    X

    3 கோவில்களின் பூட்டை ஒரு லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை

    • துறையூர் அருகே ஒரே நாள் இரவில் 3 கோவில்களில் துணிகர கொள்ளை
    • வழக்கு பதிந்து போலீசார் தீவிர விசாரணை

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அம்மாபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்வ மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் அதே கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (60) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இன்று காலை கோவிலை திறப்பதற்காக வந்த பன்னீர்செல்வம்,கோவிலின் பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது கோவில் கருவறையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சாமி கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த நான்கு தங்க காசுகள், தாலி, பொட்டு உள்ளிட்ட சுமார் இரண்டு பவுன் எடையுள்ள தங்க நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக பன்னீர்செல்வம் துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதேபோன்று அதே ஊரில் உள்ள மல்லம்மாள் கோவிலின் பூட்டையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். அங்கு கோவிலின் உள்ளே வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதனுள் இருந்த சுமார் பத்தாயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றதோடு, காளிப்பட்டி முத்துமாரியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்திருப்பதும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. துறையூர் அருகே ஒரே நாள் இரவில் மூன்று கோவில்களின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×