search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சி மாற்றத்துக்கு கட்டாயப்படுத்தும் புரோக்கர்கள்
    X

    திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சி மாற்றத்துக்கு கட்டாயப்படுத்தும் புரோக்கர்கள்

    • திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சி மாற்றத்துக்கு கட்டாயப்படுத்தும் புரோக்கர்கள்
    • அப்பாவி மக்களை காப்பாற்ற கோரிக்கை

    திருச்சி:

    சர்வதேச விமான நிலை–யங்களில் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை (கரன்சி) மாற்றுவதற்கு பணம் மாற்ற கவுண்டர்கள் உள்ளன. திருச்சி விமான நிலையத்திலும் அதுபோன்ற கவுண்டர்கள் இரண்டு செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அங்கீக–ரிக்கப்படாத அந்நிய செலா–வணி தரகர்கள் முனை–யத்தில் இருந்து வெளி–யேறும் இடத்தில் காத்தி–ருந்து பயணிகளை வெளி–நாட்டு கரன்சி பரி–மாற்ற பரிவர்த்தனைகளுக்கு கட்டாயப்படுத்து–வதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டையைச் சேர்ந்த விமான பயணி ஒருவர் கூறுகையில், இந்த சட்ட விரோத பணம் மாற்ற பரிவர்த்தனை பாது–காப்பு துறையினருக்கு முன்பாகவே நடக்கின்றன. சி.சி.டி.வி. கேமராக்கள் இருந்தபோதிலும் சட்ட–விரோத பண பரிமாற்றம் தொடர்ந்து நடந்து வருகிறது. விமான நிலைய வளா–கத்திலேயே தினமும் லட்சக் கணக்கான ரூபாய் கைமா–றுகிறது. இரவு நேரங்களில் அதிகம் நடக்கிறது. இது மாதிரியான புரோக்கர்களை எப்படி நம்புவது என்று பயணிகளுக்கு தெரிய–வில்லை. பண பரிவர்த்த–னைக்கு எந்த ரசீதும் அவர்கள் தருவதில்லை. இரண்டு வருடம், மூன்று வருடம் கஷ்டப்பட்டு வெளி–நாட்டிலிருந்து சம்பாதித்து விட்டு இங்கு திரும்புகிறோம். இந்த விரோத பண பரிவர்த்தனையால் பெருந்தொகையை புரோக்கர்களிடம் இழக்க நேரிடு–கிறது என கூறினார். இன்னொரு பயணி கூறும்போது, கரன்சியின் சந்தை மதிப்பை குறைத்து காட்டி எங்களை ஏமாற்று–கிறார்கள். கரன்சி பரிமாற்றத்துக்கான கமிஷன் அதிக–மாக இருக்கிறது. புரோக்கர்கள் எங்களை துரத்தி வருவதால் எங்க–ளால் ஒன்றும் செய்ய இயல–வில்லை என்றார். சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, இதுபோன்ற சட்ட விரோத பண பரிமாற்ற புரோக்கர்கள் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருடன் கைகோர்த்துள்ளனர். பிரச் சினை விஸ்வரூபம் எடுக்கும் போது சம்பந்தம் இல்லாதவர்கள் மீது நட–வடிக்கை எடுக்கிறார்கள். இதனை விமான நிலைய அதிகாரிகளும் பாதுகாப்புத் துறையினரும் தடுத்து நிறுத்தி அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×