

மண்ணச்சநல்லூர்:
சக்தி ஸ்தலங்களில் மிக–வும் பிரசித்தி பெற்ற சமயபு–ரம் மாரியம்மன் கோவிலின் முதன்மையாக விளங்குவது இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோவில் ஆகும். இந்த கோவிலின் தேர்த்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று, ஆதிமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொ–டர்ந்து ஒவ்வொரு நாளும் முறையே சிம்மம், யானை, ரிஷபம், அன்ன வாகனங்களில் எழுந்தருளினார்.
நேற்று முன் தினம் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்த–ருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக காலை 9.15 மணிக்கு சிறப்பு அலங் காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார். அதைத் ெதாடர்ந்து காலை 9.45 மணிக்கு மேள–தாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகளு–டன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதி வழியாக வலம் வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது.
தேரோட்டத்தைெயாட்டி ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி–சட்டி எடுத்தும் கோவிலை அடைந்து பயபக்தியுடன் அம்மனை வழிபட்டு நேர்த் திக்கடன் செலுத்தினர். தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு அமைப் புகளின் சார்பாக ஆங்காங்கே அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது. சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு–பட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் ஊழி–யர்கள் செய்திருந்தனர்.