search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 கோவில்களின் பூட்டை உடைத்து துணிகர கொள்ளை
    X

    2 கோவில்களின் பூட்டை உடைத்து துணிகர கொள்ளை

    • உள்ளே சென்று பார்த்த பொழுது மாரியம்மன் சிலையில் இருந்த இரண்டு மாங்கல்யங்கள் களவு போனது தெரிய வந்தது
    • இருப்பினும் நேற்று சந்திர கிரகணம் நடைபெற்றதால் மக்கள் நடமாற்றம் குறைவாக காணப்பட்டது

    உப்பிலியபுரம்

    உப்பிலியபுரத்தை அடுத்துள்ள தெற்கு விசுவாம்பாள் சமுத்திரம் கோவில்களில் பூட்டுகள் உடைக்கப்பட்டு துணிகர கொள்ளை நடைபெற்று உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உப்பிலியபுரம் ஒன்றியம் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியை சேர்ந்த தெற்கு விஸ்வாம்பாள் சமுத்திரத்தில் பிரதான சாலையில் அமைந்துள்ளது மகா மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் நேற்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு வழக்கமான பூஜைகளை முன்னதாகவே முடித்துவிட்டு கோயில் பூசாரி செல்வராஜ் மாலை 6 மணிக்கு கோவிலை பூட்டி விட்டு சென்று உள்ளார்.

    இன்று அதிகாலை சந்திர கிரகண பரிகார பூஜைகளை செய்வதற்காக வந்தவர் கோயிலின் கேட்டில் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டும் உள்பிரகாரத்தில் உள்ள மாரியம்மன் அர்த்த மண்டப கதவுகள் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த பொழுது மாரியம்மன் சிலையில் இருந்த இரண்டு மாங்கல்யங்கள் களவு போனது தெரிய வந்தது இதனையடுத்து உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

    இதேபோல் தெற்கு விஸ்வாம்பாள்சமுத்திரம் பிரதான சாலையில் உள்ள விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று அன்னாபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

    சந்திரகிரகணத்தை முன்னிட்டு வழக்கத்திற்கு முன்னதாகவே மாலை அன்னாபிஷேக பூஜைகள் முடிவடைந்ததன் பெயரில் கோயில் குருக்கள் கார்த்திக் கோவில் கதவுகளை மூடி பூட்டிவிட்டு சென்று உள்ளார்.

    இன்று காலை சந்திரகிரகண பரிகார பூஜைகளை செய்வதற்காக கோவிலுக்கு வந்தவர் அம்மன் கோயில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு விசாலாட்சி அம்மன் சிலையில் இருந்த மாங்கல்யம் திருடு போயிருந்தது கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    தகவலின் பேரில் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ் செபாஸ்டின், சந்தியாகு பாலமுருகன், மாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு கோவில்களிலும் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் களவு போன, சிவன் கோயிலில் ஒரு திருமாங்கல்யம், மாரியம்மன் கோவிலில் இரண்டு திருமாங்கல்யம் என கோவில் தங்க நகைகளின் மதிப்பு இரண்டு லட்சம் இருக்கும் என்பது தெரிய வந்தது.

    2 கோவில்களும் அமைந்துள்ள இடம் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். இருப்பினும் நேற்று சந்திர கிரகணம் நடைபெற்றதால் மக்கள் நடமாற்றம் குறைவாக காணப்பட்டது. இதனை கொள்ளையர்கள் சாதகமாக பயன்படுத்தி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×