search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    50 ஆண்டுகளாக வசித்து வரும் மூதாட்டியின் வீடு திடீர் இடிப்பு

    • தற்கொலை முயற்சி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
    • திருச்சியில் அரசு பள்ளி விரிவாக்கத்திற்காக வீடு அகற்றம்

    ராம்ஜிநகர்,

    திருச்சி மாவட்டம் திண்டுக்கல் சாலையில் தீரன் நகரை அடுத்து பிராட்டியூர் அமைந்துள்ளது. இப்பகுதி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி பழனியம்மாள். கணவர் இறந்துவிட்ட நிலையில் பழனியம்மாள் இங்கு சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசை வீட்டில் வசித்து வந்தார். இதையடுத்து தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் பழனியம்மாள் என்பவருக்கு புதிதாக வீடு கட்டித்தரப்பட்டது.இவரது வீட்டையொட்டி மகாலட்சுமி என்பவருக்கு சொந்தமான காலி மனை ஒன்றும், அடுத்தடுத்து 3 கடைகளும் செயல்பட்டு வருகின்றன. அதன் அருகிலேயே பிராட்டியூர் அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. அதிக மாணவர் சேர்க்கை காரணமாக பள்ளியை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்காக அருகிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி பழனியம்மாளுக்கு சொந்தமான வீடு, மகாலட்சுமிக்கு சொந்தமான காலிமனை மற்றும் 3 கடைகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது.ஆனால் பழனியம்மாள் தனது வீட்டை காலி செய்ய மறுத்துவந்தார். அதிகாரிகள் கூறியும் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து இன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோர்ட்டு ஆணையுடன் ஆக்கிரமிப்பை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். அவர்கள் வீட்டை இடிக்க முற்பட்டபோது, பழனியம்மாள் பொக்லைன் எந்திரத்தின் முன்பாக அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.இதையடுத்து அதிகாரிகள் அவரையும், அவரது வக்கீலையும் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அதேபோல் மகாலட்சுமி என்பவரும் தனது காலிமனையை தர மறுத்து தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரிடமிருந்து மண்எண்ணை கேனை பறிமுதல் செய்த போலீசார் அவரையும் அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையே பழனியம்மாளின் வீடு இடிக்கப்பட்டது.உடனே அவரது உறவுக்கார பெண் ஒருவர் சற்று காலக்கெடு தரவேண்டும் என்றும், அதற்குள் வீட்டிற்குள் இருக்கும் பொருட்களை எடுத்துக்கொள்வதாகவும் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய அனுமதி அளித்தனர். இதனால் பிராட்டியூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×