புத்தனாம்பட்டி நேரு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

புத்தனாம்பட்டி நேரு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது தங்களது குடும்பத்துடன் பங்கேற்ற அவர்கள் தங்களது பழமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டு உரையாடினர்.
புத்தனாம்பட்டி நேரு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
Published on

திருச்சி:

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்காவில் உள்ள புத்தனாம்பட்டி கிராமத்தில் நேரு மேனிலைப் பள்ளி உள்ளதுஇப்பள்ளியில் 1973-74ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. தற்போது முதுமை பருவத்தில் இருக்கும் அவர்கள் தங்களின் குடும்பத்தினருடன் இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.தங்களது குடும்பத்துடன் பங்கேற்ற அவர்கள் தங்களது பழமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டு உரையாடினர்.ஏறக்குறைய, 48 ஆண்டுகள் கழித்து ஒருவருக்கொருவரை சந்தித்துக் கொண்டதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒருவரை ஒருவர் ஆர தழுவிக்கொண்டனர். வகுப்பு ஆசிரியர்களை நலம் விசாரித்தனர். பின்னர் நண்பர்களுடன் அமர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கினர். அதன் பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பினை முன்னாள் மாணவர்கள் தமிழ்செல்வன், ரெங்கராஜன், வைத்தீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பள்ளி 50ம் ஆண்டு விழாவின் முன்னோட்டமாக, பழைய நண்பர்களை நினைவு கூறும் வகையில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

X

Maalai Malar
www.maalaimalar.com