முசிறி அரசு பள்ளியில் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிெமாழி ஏற்பு

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. போதை பொருட்கள், addiction materials
முசிறி அரசு பள்ளியில் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிெமாழி ஏற்பு
Published on

திருச்சி :

திருச்சி மாவட்டம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிரான உறுமொழியை ஏற்றனர்.

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் ராஜ்குமார் தலைமையிலும் மற்ற ஏனைய ஆசிரியர்கள் உட்பட கல்லூரி மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com