அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை

திருச்சி கிழக்குத் தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ வழங்கினார்
அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை
Published on

திருச்சி,

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு மன்னார்புரத்தில் நடந்தது. இதில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தமது சொந்த செலவில் தொகுதிக்குட்பட்ட மதுரம் அரசு மேல்நிலைப்பள்ளி,இ.பி ரோடு ஹோசன்அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி, டவுன்ஹால் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் முதல் 5 இடங்களை பிடித்த 20 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, பேக், வாட்ச், ஆடைகள் ஆகியவற்றினை வழங்கினார. நிகழ்ச்சியில் மாநகர செயலாளரும் மண்டல குழுத்தலைவருமான மதிவாணன், மண்டல குழு தலைவர் ஜெயநிர்மலா,பகுதி செயலாளர்கள் ஏ.எம்.ஜி.விஜயகுமார், மணிவேல்,மாவட்ட பிரதிநிதி முகேஷ் குமார்,கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாவட்ட தலைவர் புஷ்பராஜ்,தொழிலதிபர் அலெக்ஸ் ராஜா,கண்ணப்பா ஹோட்டல் உரிமையாளர் கண்ணையா மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com