நண்பருடன் ஓட்டம் பிடித்த அரசு பள்ளி பெண் ஊழியர்

கணவரை தவிக்க விட்டு இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம்புது வாழ்க்கை அமைத்து விட்டதாக செல்போனில் தகவல்
நண்பருடன் ஓட்டம் பிடித்த அரசு பள்ளி பெண் ஊழியர்
Published on

திருச்சி,

திருச்சி துறையூர் கோம்பை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 33 ) மினி பஸ் டிரைவர். இவருக்கும் நர்சிங் படித்து வந்த நித்யா (23) என்ற மாணவிக்கும் காதல் மலர்ந்தது. இதை யடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பராஜ் காதலியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நித்யா அந்தப் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார்.அதன் பின்னர் அவரது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. 24 மணி நேரமும் செல்போனும் கையுமாக இருந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் வரவில்லை. இதற்கிடையே இன்ஸ்டாகிராம் மூலம் நவீன் என்பவர் நித்யாவுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். பின்னர் கணவருக்கு தெரியாமல் நீண்ட நேரம் அவருடன் அரட்டை அடித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியை ஒருவரை பார்க்கச் செல்வதாக கூறிச் சென்ற நித்யா வீடு திரும்பவில்லை. இதை யடுத்து புஷ்பராஜ் காதல் மனைவியை தேடி வந்தார். இந்த நிலையில் மனைவியின் செல்போனிலிருந்து நள்ளிரவு அழைப்பு வந்தது.உடனே புஷ்பராஜ் செல்போனை எடுத்துப் பேசினார். எதிர் முனையில் பேசிய நித்யா,புது வாழ்க்கை ஒன்றை அமைத்து விட்டேன். ஆகவே என்னை தேட வேண்டாம் என கூறி இணைப்பை துண்டித்தார்.இதைக் கேட்டு புஷ்பராஜ் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.பின்னர் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாயமான தனது மனைவியை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். போலீசாரின் விசாரணையில்,மாயமான நித்யா கணவரை தவிக்க விட்டு இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.அந்த இன்ஸ்டாகிராம் நம்பர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உறுதியாக தெரியவில்லை. மதுரையைச் சேர்ந்தவர் என பழகி வந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com