

திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் மொத்த விற்பனை செய்யும் சுமார் 5 மாம்பழம் குடோன்களை உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் ஒரு குடோனில் மட்டும் 5 ஆயிரத்து 270 கிலோ எத்திலின் ஸ்பிரே மூலமாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்தனர். மேலும் சட்டபூர்வ 2 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வுக்காக சென்னை கிண்டி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கெமிக்கல் மூலமாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை திருவெறும்பூர் அருகே அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கில் வைத்து முற்றிலும் அழிக்கப்பட்டன. மேலும் துறையூர் பகுதியில் எத்திலின் ஸ்பிரே மூலமாக பழுக்க வைக்கப்பட்ட 15 வாழை பழத்தார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.