ராகுல்காந்தி நடைபயணத்தில் இறந்த தஞ்சை நிர்வாகிக்கு அஞ்சலி

நாக்பூர் அருகே நடைபெற்ற பயணத்தில் பங்கேற்ற யாத்திரை கணேசன் லாரி மோதி இறந்தார்.தொடர்ந்து கணேசனின் இறுதி சடங்கு நடைபெற்றது.
ஆம்புலன்ஸ் முன்பு கட்சி கொடி ஏந்தி நிற்கும் காங்கிரஸ் நிர்வாகிகள்.
ஆம்புலன்ஸ் முன்பு கட்சி கொடி ஏந்தி நிற்கும் காங்கிரஸ் நிர்வாகிகள்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை கீழவாசல் பூமால் ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்தவர் யாத்திரை கணேசன் (வயது 57). இவர் ராகுல்காந்தி மேற்கொள்ளும் நடைபயணத்தில் கன்னியாகுமரியில் இருந்து தொடர்ந்து அவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே நடைபெற்ற பயணத்தில் பங்கேற்ற யாத்திரை கணேசன் லாரி மோதி இறந்தார்.

இதையடுத்து அங்கிருந்து நேற்று அவரது உடல் தஞ்சைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது.

பின்னர் அவரது உடலுக்கு எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி, எம்.எல்.ஏ.க்கள் துரைசந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மேயர்கள் சண்.ராமநாதன் (தஞ்சாவூர்), சரவணன் (கும்பகோணம்) , முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சி கி.வரதராஜன், நிர்வாகிகள் அலாவூதீன், கோவி.மோகன், பூபதி, சதா.வெங்கட்ராமன், செல்வம் மற்றும் பலர் செலுத்தினர். இதனை தொடர்ந்து கணேசனின் இறுதி சடங்கு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com