search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி பட்டறை
    X

    பயிற்சி பட்டறை நடைபெற்றபோது எடுத்தபடம்.

    மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி பட்டறை

    • நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
    • கலந்து கொண்டவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுகலை விலங்கியல் துறை சார்பில், 'தற்போதைய சூழலில் மீன்வளர்ப்பு மற்றும் மீன் வகைப்பாட்டியல்' என்ற தலைப்பில் ஒரு நாள் பயற்சி பட்டறை நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். முதுகலை விலங்கியல் துறைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் குமார் 'புரோ பயாட்டிக்கஸ் இன் அக்குவாகல்சர்' என்ற தலைப்பிலும், கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் கண்ணன் 'கடல்வாழ் உயிரினங்களின் பல்லுயிர் தன்மை மற்றும் பாதுகாப்பு' என்ற தலைப்பிலும் உரையாற்றினர். பின்னர் பங்கேற்பாளர்களுக்கு மீன் வகைப்பாட்டியல், மீன் வகைகளை கண்டறிதல், செதில்களின் வகைப்பாடு, நண்டு வகைகளை கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு துறைத்தலைவர்கள் சுந்தரவடிவேல், கதிரேசன், பாலகிருஷ்ணன், கவிதா, கோகிலா, பேராசிரியர்கள் வசுமதி, ஆரோக்கியமேரி பர்னாந்து, சிவமுருகன், அபுல்கலாம் ஆசாத், அந்தோணிமுத்து பிரபு, ஆல்வின், லிங்கதுரை, மணிகண்டராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை முதுகலை விலங்கியல் துறை பேராசிரியர் லோக்கிருபாகர், கொளஞ்சிநாதன், ஆய்வக உதவியாளர் அன்புசெல்வன் மற்றும் முதுகலை விலங்கியல் துறை மாணவ-மாணவிகள் செய்து இருந்தனர். பேராசிரியை ரமாதேவி நன்றி கூறினார்.

    Next Story
    ×