search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்  வீட்டு அலங்கார பொருட்கள் செய்வது குறித்து பயிற்சி
    X

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வீட்டு அலங்கார பொருட்கள் செய்வது குறித்து பயிற்சி

    • பயிற்சி திட்டத்தில் வேலன் ஸ்டேசனரி கடையின் உரிமையாளர் விஜய ஷர்மிளி மற்றும் ஹரிணி மனோன்மணி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
    • தொழில் அதிபராக மாறுவதற்கு கடின உழைப்பு, விடா முயற்சி, குறிக்கோள் மிகுந்த மனதைரியம் போதுமானது என்று கூறி மாணவிகளை ஊக்குவித்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்த னார் கல்லூரியில் உள்தர மதிப்பீடு உறுதிப்பிரிவு மற்றும் பெண்கள் கல்வி மையம் சார்பில் வீட்டு அலங்கார பொருட்கள் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி திட்டத்தில் வேலன் ஸ்டேசனரி கடை யின் உரிமையாளர் விஜய ஷர்மிளி மற்றும் ஹரிணி மனோன்மணி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற னர்.

    இந்த பயிற்சி திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

    உள்தர மதிப்பீட்டு உறுதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலன்ட் நைட் வரவேற்று பேசினார். பெண்கள் மையத்தின் ஒருங் கிணைப்பாளர் கு.ராம ஜெயலெட்சுமி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

    சிறப்பு விருந்தினர் விஜய ஷர்மிளி பேசுகையில், பெண்கள் சுயதொழில் குறித்தும், தங்களுடைய விருப்பத்தை எப்படி தொழிலாக மாற்ற வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.

    கல்வி தான் எல்லா வற்றிற்கும் அடிப்படை என்றும், பெற்ற கல்வியை கொண்டு எப்படி வெற்றி பெறலாம் என்றும் பேசினார்.

    மேலும் தொழில் அதிப ராக மாறுவதற்கு பின்புலம் தேவை இல்லை என்றும் கடின உழைப்பு, விடா முயற்சி, குறிக்கோள் மிகுந்த மனதைரியம் போது மானது என்று கூறி மாணவிகளை ஊக்குவித்தார்.

    ஹரிணி மனோன்மணி மாணவிகளுக்கு மிகவும் நேர்த்தியாக வீட்டு அலங் கார பொருட்கள் செய்வது எப்படி என்று பயிற்சி அளித்தார். மாணவிகளுக்கு எளிதாக புரியும் வகையில் மிகவும் பொறுமையுடன் செய்து காட்டினார்.

    இந்த பயிற்சி திட்டத்தில் அனைத்து முதுகலை மாணவிகளும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முடிவில் பெண்கள் கல்வி மையத்தின் உறுப்பினர், கணிதவியல் உதவி பேராசிரியை சரண்யா நன்றி கூறினார்.

    இந்த பயிற்சி திட்டத்தில் ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி, ரீட்டா யசோதா, சோனியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×