search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழிவுநீரை எந்திரங்கள் மூலம் எப்படி சுத்தம் செய்வது குறித்த பயிற்சி முகாம்
    X

    பயிற்சி முகாமில் மேயர் சண். ராமநாதன் பேசினார்.

    கழிவுநீரை எந்திரங்கள் மூலம் எப்படி சுத்தம் செய்வது குறித்த பயிற்சி முகாம்

    • பாதுகாப்பு கருவிகள் உள்பட பல்வேறு பாதுகாப்பு பணிகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
    • கழிவுநீர் வாகனத்தை இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு நகர்ப்புற ஆய்வு நிறுவனம் சார்பில் கழிவுநீர் சேகரிப்பு தொட்டியில் இருந்து கழிவுநீரை எந்திரங்களை கொண்டு பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்வது குறித்து கழிவுநீர் லாரிகளை இயக்குபவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை , தஞ்சை மாநகராட்சி, தூய்மை இந்தியா திட்டம் சார்பில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமை தாங்கினார்.

    இந்த பயிற்சி முகாமை மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்து பேசினார்.

    மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி முன்னிலை வகித்தார்.

    இதில் தூய்மை பாரத இயக்க பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் தமிழ்நாடு நகர்ப்புற ஆய்வு நிறுவனம் டாக்டர்கள் தமிழ்செல்வன், கோவிந்தன், முத்துசாமி, செல்வநாயகி மற்றும் குழுவினர் கலந்து கொண்டு எந்திரங்களை கொண்டு கழிவு நீர் அகற்றும் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள், கழிவுநீர் சேகரிப்பு தொட்டியை சுத்தம் செய்வதற்கு முன் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், பணியிடங்களில் உடல் நலத்தையும் பாதுகாப்பையும் பேணுதல், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது அணிய வேண்டிய தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், பாதுகாப்பு கருவிகள் உள்பட பல்வேறு பாதுகாப்பு பணிகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    இதில் கழிவுநீர் வாகனத்தை இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×