கொடைக்கானல் ஏரிச்சாலையில் மணல் குவியல்களால் போக்குவரத்து இடையூறு

கொடைக்கானல் ஏரிச்சாலையில் மணல் குவியல்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது
கொடைக்கானல் ஏரிச்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக குவித்து வைக்கப்பட்டுள்ள மண் குவியல்
கொடைக்கானல் ஏரிச்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக குவித்து வைக்கப்பட்டுள்ள மண் குவியல்
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானல் ஏரிச்சாலையில் கடந்த மாதத்தில் நீதிமன்ற உத்தரவின்பேரில் நெடு ஞ்சாலை ஆக்கிரமிப்புகள், சாலையோரக்கடைகள் அகற்றப்பட்டது. அப்போது ஏரிச்சாலை அருகே நகராட்சி படகுக்குழாம் எதிரே இருந்த சவாரிக்குதிரைகள் நிற்கும் தளம் இடிக்கப்பட்டது. அது சமயம் அப்பகுதி தடுப்புச்சுவர் சரிந்து விழுந்தது.

தடுப்புச்சுவர் சீரமைக்கும் பணியும் முழுமையாக நடைபெறாத நிலையில் ஏரிச்சாலையில் சரிந்து விழுந்த மண் மற்றும் கற்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. இந்த மண் குவியல்கள் அதேபகுதியில் பல இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலாப்பயணி கள் வாகனங்கள் செல்வ திலும் வாகனங்கள் நிறுத்துவதிலும் கடும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

 சில நேரங்களில் வாகன நெரிசலில் சிக்கி சுற்றுலாப்பயணிகள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சாலை கடும் போக்குவரத்து நெரிசலில் அடிக்கடி சிக்கி விடும். தற்போது சுற்றுலா பயணிகள் வருகையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கோடை விழாவின் போது சுற்றுலாப்பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க கூடும். 

எனவே இதனை கருத்தில் கொண்டு சாலையில் தேங்கியுள்ள மண் மற்றும் கற்குவியலை உடனடியாக அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்

X

Maalai Malar
www.maalaimalar.com