search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடத்தூரில் பாரம்பரிய எருது விடும் திருவிழா
    X

    தருமபுரி மாவட்டம் கடத்தூரில் நடந்த எருது விடும் விழா.

    கடத்தூரில் பாரம்பரிய எருது விடும் திருவிழா

    • காளை மாடுகளை தயார்படுத்தும் பணியில் உரிமையாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
    • வடக்கயிறால் கட்டி சாலைகளில் சீறி பாய வைத்து விளையாட்டு காட்டி அனைவரையும் மகிழ்வித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் எருது விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    மாட்டுப் பொங்கல் நாளன்று பொங்கல் வைத்து, படையலிட்டு கால்நடைகளை மக்கள் வணங்குவார்கள். அதே நாளில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற தமிழர் பாரம்பரியமிக்க வீர விளையாட்டுகள் நடைபெறும்.

    மூன்றாவது நாள் எருது விடும் திருவிழா கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டில் மஞ்சு விரட்டிற்காக தருமபுரி சுற்று வட்டார பகுதிகளில் காளை மாடுகளை தயார்படுத்தும் பணியில் உரிமையாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

    மணல் குவியல்களை குத்தி கிளறுதல் போன்ற பயிற்சிகளில் காளை மாடுகள் ஈடுபடுத்தப்பட்டு, பொங்கல் நாளன்று அவை மஞ்சு விரட்டுக்கு பயன்படுத்தப்பட்டது.

    இந்த வகையில் 12 கிராமங்களை உள்ளடக்கிய தாய் கிராமமான கடகத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற எருது விடும் விழாவிற்கு கடகத்தூர் ஊர் கவுண்டர் பச்சியப்பன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாலு, மாவட்ட கவுன்சிலர் சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பச்சமுத்து ஊர் முக்கிய பிரமுகர்கள் பழனி, காமராஜ், ஊர் கவுண்டர், ஊர் முதலியார், ஊர் செட்டியார், ஊர் நாயுடு, ஊர் நயினார், அனைத்து கோம்பு கவுண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஊர் கவுண்டர்கள் ஒன்று கூடி கடகத்தூர் பொதுமண்டுவில் சாட்டைக்கு பூஜை செய்து அந்த சாட்டையை எடுத்துச் சென்று எருதுகளின் மேல் பாரம்பரிய வழக்கப்படி மூன்று தரம் தட்டி வணங்கிய பிறகு எருது விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு எருதுகளை வடக்கயிறால் கட்டி சாலைகளில் சீறி பாய வைத்து விளையாட்டு காட்டி அனைவரையும் மகிழ்வித்தனர். இந்த எருது விடும் விழாவில் தருமபுரி பி1 நகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×